புதுசு

குவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கான மருத்துவக் கட்டணங்கள் மறுஆய்வு!
குவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இந்த ஆய்வின் அடிப்படையில் புதிய கட்டண விகிதங்களை குவைத் அரசே நேரடியாக வெளியிடும், முன்பு போல் பாராளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்கு அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் கட்டணங்கள் அமையாது என்றும் குவைத் சுகாதாரத் துறை அமைச்சர் ஷேக். டாக்டர் பாஸில் அல் ஸபா தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் கூற்றுப்படி, ஒரு புதிய ஆய்வுக்கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வெளிநாட்டினருக்கு விதிக்கப்படும் மருத்துவ கட்டண விபரங்கள் ஒப்பீடு செய்யப்படும். மீளாய்வின் போது மருத்துவமனைகள் மற்றும் பாலிகிளினிக்குகளின் கருத்துக்களும் பெறப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Source: Times of Kuwait
தமிழில்: அதிரை நியூஸ்

No comments