புதுசு

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு

பாகிஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்., முன்னாள் எம்.பி., மணிசங்கர் அய்யர், பாக்.,கை புகழ்ந்தும், இந்தியாவை விமர்சித்தும் பேசியதாக அவர் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை கோடா நீதிமன்றத்தில் பிப்., 20ம் தேதி நடக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியை, காங்., முன்னாள் எம்.பி., மணிசங்கர் அய்யர் தரக்குறைவாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த காங்., கட்சி, அவரை சஸ்பெண்ட் செய்தது. இந்நிலையில் பிப்., 11ம் தேதி, பாகிஸ்தான் சென்ற மணிசங்கர் அய்யர், கராச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாகவும், அங்கு பாகிஸ்தானை புகழ்ந்தும், இந்தியாவை விமர்சித்தும் பேசியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, ராஜஸ்தான் மாநிலம் கோடா நீதிமன்றத்தில், அம்மாநில பா.ஜ., தலைவர் அசோக் சவுத்ரி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாக்., விரும்புவதாகவும், ஆனால் இந்தியா பேச்சுவார்த்தைக்கு அக்கறை காட்டவில்லை என கராச்சியில் மணிசங்கர் அய்யர் பேசியதாக குறி்ப்பிட்டுள்ளார். மேலும் இது தேசதுரோகம் எனக் குறிப்பிட்ட அவர் மணிசங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ள கோடா நீதிமன்றம், பிப்., 20ம் தேதி விசாரணை நடத்துகிறது.

No comments