புதுசு

விஸ்வரூபம் எடுக்கும் தஞ்சை பெரிய கோவில் சிலை கடத்தல் விவகாரம்: பல கோடி மதிப்புள்ள மேலும் 11 சிலைகள் மாயம்
தஞ்சை: பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழன் உள்பட ஏராளமான சிலைகள் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி சிலைகடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை தீவிரமடைந்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள ராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவியின் சிலைகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிலைகளை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.


கோயில் வளாகத்தில் உள்ள சிலை பாதுகாப்பு மண்டபத்தில், கடந்த ஒன்றரை மாதமாக சிலைகள் கணக்கெடுப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சிலை பாதுகாப்பு மையத்தில் இருந்து மேலும் 11 சிலைகள் கடத்தப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போன்றவற்றில் 2 சிலைகள் தங்கத்தால் ஆன கொள்கைத்தேவர், சேத்திரபாலா ஆகியவையாகும்.


இந்த 2 சிலைகள் மட்டும் பல கோடி ரூபாய் மதிப்புள்ளதாக கூறப்படுகிறதுஇதுதவிர 1 வெள்ளி சிலை மற்றும் 3 பஞ்சலோக சிலை ஆகியவையும் மாயமாகியுள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் கோயில் அதிகாரிகள் மற்றும் பூசாரிகள் துணையுடன் கடத்தப்பட்டிருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடைய அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுவார்கள் என்று டிஎஸ்பி வெங்கடராமன் தெரிவித்துள்ளார்.

No comments