புதுசு

சின்னாபின்னமான சிரியா.....நிவாரண பணிகளை தொடங்கிய ஐ.நா. : 12 - 16 மணிநேரம் வரை சண்டையை நிறுத்த பேச்சுவார்த்தை
சிரியாவில் அரசு கூட்டு படையினரின் தாக்குதலில் சின்னாபின்னமான கிழக்கு கவுட்டா நகரத்தில் ஐ.நா. நிவாரண பணிகளை தொடங்கியுள்ளது. கிழக்கு கவுட்டாவில் மனிதாபிமான உதவிகள்செய்வது என்று நேற்று ஐ.நா.

 மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ஐ.நா. மற்றும் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் சிரியாவில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.மருந்துகள், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 50 வாகனங்கள் கவுட்டாவுக்கு சென்றுள்ளனர். நிவாரணப் பணிகளுக்கு 5 மணிநேர போர் நிறுத்தம் போதாது என்று தெரிவித்துள்ள, ஐ.நா.

 குழு குறைந்தது 12 மணிநேரம் போர் நிறுத்தம் செய்ய அரசுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளனர். சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி குழுவினர் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.கிளர்ச்சியாளர்களின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கும் இடங்களை அழிக்க ரஷ்ய படைகளின் துணையுடன் சிரியா ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த வாரம் கிழக்கு கவுட்டா பகுதியில் கூட்டு படையினர் நடத்திய தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

No comments