புதுசு

துபையில் 15 இடங்களில் பாதசாரிகளுக்கான ஸ்மார்ட் சிக்னல்கள் அமைப்பு!
சாலையின் குறுக்கே கடந்து செல்லும் பாதசாரிகளுக்காக 'ஜீப்ரா கிராஸிங்' எனப்படும் நடைபாதை ஒதுக்கீடுகள் எங்கெங்கும் காணப்படும், காலத்திற்கு ஏற்ப இதில் பல்வேறு நவீனங்களை புகுத்துவது வளர்ந்த நாடுகளில் மிகச் சாதாரணமாக நடைபெற்று வரும் மாற்றங்களுள் ஒன்றாகும்.

https://www.facebook.com/GulfNews.UAE/videos/1804095949656655/

துபையில் அல் சஆதா சாலையில் (Al Sa’ada Street) வாகனங்களுக்கு இருக்கும் போக்குவரத்து சிக்னல் போன்று பாதசாரிகளுக்கு என பிரத்தியேக சிக்னல்கள் தரையில் பதிக்கப்பட்டு பரீட்ச்சார்த்த அடிப்படையில் அமைக்கப்பட்டு சோதிக்கப்பட்டு வந்தது வெற்றியடைந்ததை தொடர்ந்து ஆரம்பமாக துபையில் மேலும் 15 இடங்களில் இந்நவீன ஸ்மார்ட் சிக்னல்களை நிறுவியுள்ளது துபை போக்குவரத்துத் துறை.

மேலும் பாதாசாரிகள் குறுக்கே நடந்து செல்ல பயன்படும் ஜீப்ரா கிராஸிங்குகளில் ஆட்கள் நடமாட்டம் இல்லாவிட்டாலோ அல்லது குறைவாக இருந்தாலே அவற்றை உள்ளுணர்ந்து அதற்குத்தக செயல்பட்டு சாலையை கடக்கும் வாகனங்களுக்கு அதிநேரத்தை வழங்கும் அல்லது மெதுவாக நடந்து செல்லும் முதியவர்கள், லக்கேஜ்கள் மற்றும் குழந்தைகளுக்கான தள்ளு வண்டிகளை இழுத்துச் செல்லுவோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சாலையை கடக்க தேவையான நேரத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தானியங்கி சென்சார் கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன.

Source: Gulf News
தமிழில்: அதிரை நியூஸ்

No comments