புதுசு

2016-17-18 மதிப்பீட்டு ஆண்டுக்கான வரிக்கணக்கு: இன்று முதல் 31ம் தேதி வரை தாக்கல் செய்யலாம்வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் மார்ச் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வருமானவரித்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. வருமானவரிக் கணக்குகளை தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் கணக்குகளைத் தாக்கல் செய்வதை நிறுத்தியவர்கள் குறித்து நடத்தப்பட்ட விரிவான தகவல் ஆய்வின் அடிப்படையில், வரி செலுத்திய அதேசமயம், 2016-17 மற்றும் 2017-18-ம் மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமானவரிக் கணக்குகளை தாக்கல் செய்யாதவர்களுக்கு, அதை நினைவூட்டும் வகையில், வருமானவரித் துறை கடிதங்களை அனுப்பியுள்ளது.
இந்தக் கடிதங்களைப் பெற்ற வரி செலுத்தியோர் விளக்கம் கேட்டும், வழிகாட்டு உதவி வழிமுறைகளைக் கோரியும் ஏராளமானோர் பதில் அளித்துள்ளனர்.

மேலும், 2016-17 மற்றும் 2017-2018 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கு வரும் 31ம் தேதி கடைசி 31ம் தேதி கடைசி நாளாகும். இதனைக் கருத்தில் கொண்டும், வரி செலுத்தியோர் குறிப்பாக, சுய வேலைவாய்ப்பு, ஊதியம், ஓய்வூதியம் மூலம் வருமானம் பெறுவோர், வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதைத் தூண்டும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னையில் ஆயகார் பவன், எண்.121, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600 034, பிஎஸ்என்எல் கட்டிடம், எண்.16, கிரீம்ஸ் சாலை, சென்னை-600 006, எண்.130-பி, முடிச்சூர் சாலை, மேற்கு தாம்பரம், சென்னை – 600 045 ஆகிய இடங்களில் செயல்படும் சேவை மையங்களில் மார்ச் 31ம் தேதி வரை வரை தங்கள் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-28338014, 28338314 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments