புதுசு

ஊழியர்களால் ரூ.2450 கோடியை இழந்த பொதுத்துறை வங்கிகள்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற மோசடி வெளிவந்ததை அடுத்து, பல ஆண்டுகளாக பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்று வந்த ஏராளமான மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வங்கி மோசடிகள் குறித்து ரிசர்வ் வங்கி புள்ளி விபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், 2013 ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016 ஜூன் வரை வங்கி மோசடி தொடர்பாக 1232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.2450 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் மோசடியில் ஈடுபட்டதாக வங்கி ஊழியர்கள் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ராஜஸ்தான், சண்டிகர், டில்லி, மேற்குவங்கம் மாநிலங்களின் வங்கிகளில் அதிக அளவிலான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது. வெளி ஆட்கள் மட்டுமின்றி வங்கி ஊழியர்கள் அல்லது அதிகாரிகளும் ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேலான தொகையை மோசடி செய்துள்ளனர். 

கிராமங்களில் அதிக அளவிலான வங்கி கிளைகள் அமைக்கப்பட்டுள்ளதே தென் மாநிலங்களில் வங்கி மோசடி அதிகம் நடைபெற காரணம் என கூறப்படுகிறது. அதிகபட்சமாக வங்கி மோசடி தொடர்பாக தமிழகத்தில் 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில வாரியாக மோசடி விபரம் :

தமிழகம் - 170 வழக்குகள் (ரூ.83.09 கோடி)
ஆந்திரா - 157 வழக்குகள் (ரூ.148.41 கோடி)
கர்நாடகா - 125 வழக்குகள் (ரூ.89.34 கோடி)
மகாராஷ்டிரா - 107 வழக்குகள் (ரூ.110.43 கோடி)
கேரளா - 50 வழக்குகள் (ரூ.30.53 கோடி)
ராஜஸ்தான் - 38 வழக்குகள் (ரூ.1096 கோடி)
சண்டிகர் - 3 வழக்குகள் (ரூ.253.44 கோடி)
டில்லி - 37 வழக்குகள் (ரூ.188.22 கோடி)
மேற்கு வங்கம் - 69 வழக்குகள் (ரூ.167 கோடி)
வெளிநாட்டு கிளைகள் - 9 வழக்குகள் (ரூ.41.6 கோடி)
மற்ற 21 மாநிலங்கள் - 467 வழக்குகள் (ரூ.241.53 கோடி)

No comments