புதுசு

அமீரகத்தின் சீதோஷ்ணம் வரும் நாட்களில் 37° செல்சியஸ் வரை உயரும்!


அமீரக தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளபடி, இன்னும் சில தினங்களுக்குள் அமீரக வெப்ப நிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதால் தட்பவெப்பம் 37 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் மேலும் இரவு நேரங்களிலும் அதிகாலை நேரத்திலும் வெக்கை எனும் இருக்கமான ஈரப்பதமும் 85 சதவிகிதம் கடற்கரையோர பிரதேசங்களில் அதிகரித்துக் காணப்படும்.
\
காலையில் நிலவும் மூடுபனியால் குறிப்பாக அபுதாபியின் அல் தப்ரா பகுதிகளில் மங்கலான வெளிச்சத்தால் 1,000 மீட்டர் வரை சாலைகளில் பார்வையின் தன்மை மறைபடலாம். செவ்வாய்கிழமைக்குப் பின் வட அமீரக பகுதிகளில் மேக மூட்டம் அதிகரிப்பதால் சூடு ஓரளவு குறைந்து 16 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது.

Source: Gulf News
தமிழில்:அதிரை நியூஸ்

No comments