புதுசு

ரயில்வேயில் 90,000 காலியிடங்கள் : தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்; இதுவரை 2.8 கோடி பேர் விண்ணப்பம்ரயில்வேயில் 90,000 காலியிடங்களை நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் தேர்வில் பங்கேற்பதற்காக இதுவரை 2 கோடியே 80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் சி மற்றும் டி பிரிவுகளில் உள்ள 90,000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. லோகோ பைலட், டெக்னீஷியன் உள்ளிட்ட பிரிவுகளில் 26,502 பணியிடங்களும், கேன்மேன், டிராக் மேன் உள்ளிட்ட பிரிவுகளில் 62,907 பணியிடங்களும், நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் தேர்வுகளில் பங்கேற்பதற்காக கடந்த ஒரு வாரத்தில் 2 கோடியே 80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் மேலும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லெவல் 2 பிரிவில் ரூ.19,000-ல் இருந்து ரூ.63,200 வரை மாத சம்பளமாகவும், லெவல் 1 பிரிவில் ரூ.18,000-ல் இருந்து ரூ.56,000 வரை மாத சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஐடிஐ மற்றும் அதற்கு இணையான தொழில்நுட்ப படிப்புகள், மேல்நிலை பள்ளி முடித்தவர்கள், இத்தேர்வில் பங்கேற்கலாம். ரயில்வேயில் கூடுதலாக 20,000 இடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments