புதுசு

குவைத்திலிருந்து அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்க ஒப்புதல்!

குவைத்திலிருந்து அவரவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்தின் மீது வரி அல்லது புதிய சேவை கட்டணம் விதிக்க குவைத் பாராளுமன்றம் ஒப்புதல் தெரிவித்தது என்றாலும் சட்டம் இதுவரை இறுதிவடிவம் பெறவில்லை.

குவைத் மத்திய வங்கி இத்தகைய வரிவிதிப்புக்கள் கள்ள மார்க்கெட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்களையே ஊக்குவிக்கும் என கடும் ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சலெஹ் அஷ்ஷோர் என்பவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆராய்ந்தது.

இந்தக்குழு குவைத் மத்திய வங்கியின் ஆட்சேபத்தை புறந்தள்ளியதுடன் இது சட்டப்பூர்வமான வரி விதிப்புத்தான் என்றும் இதன் மூலம் வருடத்திற்கு 50 முதல் 60 மில்லியன் குவைத் தினார் வரை அரசுக்கு வருவாய் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வரி விதிப்பு திட்டத்திலிருந்து குறைவான சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டும் விலக்களிக்கலாம் என்றும் பணம் அனுப்புவதின் மீது 4 வகையான வரி வசூல் திட்டங்களையும் பரிந்துரை செய்துள்ளது.

Source: Kuwait Times
தமிழில்: அதிரை நியூஸ்

No comments