புதுசு

ராஜாவின் தொடரும் சர்ச்சை கருத்து : திரிபுராவில் லெனின் சிலையை போல, தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும்தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பா.ஜ.க. நிர்வாகி எச்.ராஜா மிரட்டல் விடுத்துள்ளார். திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று முகநூலில் எச்.ராஜா மிரட்டல் விடுத்துள்ளார்.
திரிபுராவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. கடந்த சனிக்கிழமைதான் தேர்தல் முடிவு வெளியான நிலையில், திங்கள்கிழமையான நேற்று, திரிபுராவில் லெனின் சிலை புல்டோசர் வைத்து இடிக்கப்பட்டுள்ளது.

லெனின் சீனர் என்றும் தீவிரவாதி என்றும் பாஜகவினர் வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்நிலையில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற எச்.ராஜா கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டங்கள் எழுந்து வருகிறது. இதேபோல் சென்னை ஐஐடியில் தமிழ் பண்பாடு வளர்த்த போது எடுத்த படம் என்று ஆணும் பெண்ணும் உதட்டோடு உதடாக முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். சமீபகாலமாக சர்ச்சையில் சிக்குவதை எச்.ராஜா வாடிக்கையாக கொண்டுள்ளார்.பெரியார் சிலையை பாஜகவினர் உடைக்கட்டும், விளைவுகளை சந்திக்கட்டும் என


கி.வீரமணி கூறியுள்ளார்.கி.வீரமணி கூறியுள்ளார்.பெரியார் சிலையை உடைக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் கனவிலும் நடக்காது என தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கு.


ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். எச்.ராஜா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். பா.ஜ.க.வில் பெரிய பதவி என்று எச்.ராஜா தீவிரமாக பேசி வருகிறார் என அவர் விமர்சனம் செய்துள்ளார். சமூக விஞ்ஞானியான பெரியாரை மத நம்பிக்கை உள்ளவர்களும் ஏற்று கொண்டுள்ளனர்.

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு கட்சி நிர்வாகி அரசகுமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசியலுக்காக தலைவர்கள் பெயரை பயன்படுத்தக்கூடாது என அரசகுமார் கூறியுள்ளார்.

No comments