புதுசு

'சவுதி கல்ப்' எனும் புதிய விமானச்சேவைக்கு துபையில் வரவேற்பு !
சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு துபையின் டெர்மினல் 1ல் இருந்து தினமும் 2 முறை பறக்கும் சவுதிகல்ப் (SaudiGulf) எனும் புதிய விமான நிறுவனத்தின் சேவை துவங்கியது. கடந்த வியாழன் அன்று ரியாத்திலிருந்து வந்திறங்கிய முதலாவது விமானத்திற்கு பாரம்பரிய முறைப்படி நீர் பீய்ச்சியடிக்கப்பட்டு வரவேற்பு நல்கப்பட்டது.

துபையின் முக்கிய 10 விமானத் தடங்களில் ஒன்றாக ரியாத் விளங்குகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் துபை – ரியாத் வான் தடத்தில் 1.85 மில்லியன் பயணிகள் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

Source: Emirates 247
தமிழில்:அதிரை நியூஸ்

No comments