புதுசு

சிதறும் சிரியா....கதறும் மக்கள் : மீட்புக்குழு வாகனங்கள் மீது ராணுவம் இரக்கமின்றி தாக்குதல்

சிரியாவில் தாக்குதலால் படுகாயமடைந்த அப்பாவி மக்களுக்கு உதவிகள் கிடைப்பதை தடுத்து நிறுத்த மீட்புக்குழு வாகனங்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வசதியாக தினமும் 5 மணிநேரம் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்வதாக ரஷ்யாவும், சிரியாவும் அறிவித்தன.

ஆனாலும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்ககூடாது என்பதில் ராணுவம் முனைப்புக்காட்டுகிறது.நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் தொண்டு நிறுவன வாகனங்கள் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் மீதும் தாக்குதல் அரங்கேறுகின்றன. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுட்டாவில் கடந்த மாதம் 18-ம் தேதி முதல் சிரிய ராணுவமும், அதன் கூட்டு படைகளும் கடுமையான வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வந்தன. கடந்த வியாழக்கிழமை முதல் தரைவழியாக அந்த பகுதியில் முன்னேறி வருகின்றனர்.

No comments