புதுசு

(நெருங்கி வரும் மறுமை நாள்!!!)


சவூதியில் அமோகமாக ஆரம்பமான ஜாஸ் இசை கச்சேரி!சிரியா குழந்தைகள் இறந்து கிடக்கிறார்கள் இவர்களுக்கு இசை தேவைபடுகிறது ?
பொருளாதாரத்தில் பின்னோக்கி செல்லும் சவூதி அரேபியாவை நவீன இஸ்லாமியா நாடாக மாற்றி வருவாயை மீண்டும் வரவழைத்து கொள்ளும் சவுதி இளவரசரின் தூரநோக்கு திட்டங்களில் ஒன்றாக முதலாவது “ஜாஸ் மியூசிக்” திருவிழா கடந்த வெள்ளியன்று ஆரம்பமானது!
இந்த இசை கச்சேரியில் ஏராளமானோர் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக் காலமாக எண்ணை ஏற்றுமதியில் பெரும் பின்னடைவை சந்தித்து வரும் சவூதி அரேபியா, உல்லாசத்துறையை மேம்படுத்துவதன் மூலம் டுபாய் போன்று வீழ்ந்துபோன வருவாயை மீண்டும் தூக்கி நிறுத்தி விடலாமென எதிர்பார்க்கிறது.
அதற்கமைவாக சினிமா திரை அரங்குகள், திறந்த வெளி கடற்கரைகள் (Bikini) என்பவற்றையும் அமைக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஸவூதியின் இஸ்லாத்துக்கு முறனான காரியங்கள் பலவற்றை விமர்சித்து எதிர்த்த பல உலமாக்கள் பலவருடமாக சிறையில் உள்ளனர். சிலரை கொன்றும்விட்டனர்.
அமெரிக்காவின் கைக்கூழியான மன்னராட்சியை அல்லாஹ் வீழ்த்துவானாக. தூய்மையான இஸ்லாமிய அரசை ஏற்படுத்துவானாக

No comments