உலகின் 20 ஆபத்தான பாலங்கள்
1. சிடு ஆற்றுப்பாலம்

சீனாவின் சிடு ஆற்றின் மேல் அமைந்துள்ள இந்தப் பாலமே உலகின் மிக மிக உயரமான பாலமாக விளங்குகின்றது. இந்தப் பாலம் ஷங்காய் நகரையும் சோங்க்கிங் நகரையும் இணைக்கின்றது. மிரட்டலான இந்தப் பாலம் அற்புத காட்சிகளை பரவச நிலையையும் வழங்கக்கூடியது என்றாலும் உயரத்தை கண்டு அஞ்சுவோருக்கு உகந்த இடமல்ல.
2. தி கர்ரிக்-எ-ரெடி கயிற்றுப்பாலம்

அயர்லாந்து நாட்டில் நீருக்கு அடியில் பாறைகள் நிறைந்த கடற்பகுதிக்கு மேல் இந்தப் கயிற்றுப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை பயன்படுத்தி மக்கள் தீவின் ஒருபுறத்திலிருந்து மறுபுறம் செல்ல 'ஒருவழிப் பாதையாக' பயன்படுத்துகின்றனர், திரும்பி வருவதற்கு படகை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் இந்த பாலத்தில் செல்வதற்கு கட்டணமும் செலுத்த வேண்டும்.
3. தி ஸ்டோர்செய்சன்டட் பாலம்

நார்வே நாட்டில் அமைந்துள்ள இந்தப் பாலம் தோற்றத்தில் மிக வளைவானதாக, ஆபத்தானது போல் தோன்றினாலும் அனுபவத்தில் ஒரு ரோலர்கோஸ்டரில் (Roller Coaster) சாகச பயணம் செய்த அனுபவத்தை தருமாம்.
4. தி யூ பெயின் பாலம்

மியான்மாரில் உள்ள இந்த பாலம் தோற்றத்திற்கு இன்னும் முழுமையடையாதது போல் தோன்றும் ஆனால் இது பூர்த்தியான ஒன்றே. மேலும் சுமார் 1 கி.மீ தூரத்திற்கு நீண்டுள்ள இந்தப் பாலம் கட்டமைப்பு ரீதியில் பாதுகாப்பான ஒன்றே.
5. மோன்டிநெக்ரோ மழைக்காட்டுப் பாலம்

கோஸ்டா ரிகா நாட்டின் மழைக்காடுகளுடையே அமைக்கப்பட்டுள்ள இந்த மரப்பாலம் மீதிருந்து பல வித்தியாசமான இயற்கை காட்சிகளை ரசிக்கலாம் அதேவேளை பல மரக்கட்டைகள் பல இடங்களில் காணாமல் போயுள்ளதாலும், எதிர்பாரா ஆபத்துக்கள் நிறைந்துள்ளதாலும் இதுவும் ஓர் ஆபத்தான பாலமே.
6. அழிவில்லாதவர்களின் பாலம்

'அழிவில்லாதவர்களின் பாலம்' என்ற வித்தியாசமான பெயருடைய இந்தப் பாலம் சீனாவில் அமைந்துள்ளது. இந்த பாலத்திற்கு சென்று பார்ப்பதற்கும், நடந்து செல்லவும், உச்சியிலிருந்து வனத்தையும் மேகத்தையும் ரசிப்பதற்கும் அனுமதிக்கப்படுகின்றது ஆனால் இதற்கான அனுமதியை பெறுவதற்கான அரசு நடைமுறைகள் தான் மிகவும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாம்.
7. எஷிமா ஒஹாஷி பாலம்

செங்குத்தாக திகிலூட்டும் வகையில் தோற்றமளிப்பதாலேயே புகழ்பெற்றது என்றாலும் இது நம் பார்வையை ஏமாற்றும் தோற்றமே அது. இந்த பாலம் 144 அடி உயரத்தில் அமைந்துள்ளதுடன் 6.1 சதவிகிதம் மட்டுமே உண்மையில் செங்குத்தான சாய்வு நிலையில் அமைந்துள்ளது, அதாவது கண்ணை நம்பாதே அது உன்னை ஏமாற்றும் என்ற தமிழ் சினிமா பாடல் இதற்கும் பொருந்தும்.
8. சூரியஒளி வான்வெளி பாலம், ஃபுளோரிடா, அமெரிக்கா

இதற்கு முன்னிருந்த பாலத்தின் மீது ஒரு எண்ணெய் கப்பல் மோதி சேதமடைந்ததால் இந்த புதிய பாலம் 1980 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. எனினும் இந்தப் பாலத்திலிருந்து குதித்து பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதால் இதற்கு பேய் பாலம் என்ற கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டது.
9. குயிப்போஸ் மரப்பாலம்

கோஸ்டா ரிகா நாட்டில் அமைந்துள்ள இந்தப்பாலம் மரத்தால் ஆன சாலை இணைப்புகளை உடையது. மேலும் பல்லு போன முதியவர்கள் போல இணைப்பு கட்டைகளும் ஆங்காங்கே காணாமல் போயிருக்கும். இதன் இன்னொரு பெயர் 'மரண பாலம்'
10. பியூன்டே டி ஒஜிவேலா நடைபாலம்

மேக்ஸிகோ நாட்டில் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் கீழ் தாதுக்களை வெட்டியெடுக்கும் சுரங்கங்கள் உள்ளது. இதில் ஆட்கள் நடந்து செல்ல மட்டுமே அனுமதி உண்டு. உலகின் மிக ஆபத்தான பாலங்களின் பட்டியலில் இதற்கும் ஓர் இடமுண்டு.
11. விடிம் ஆற்றுப்பாலம்

ரஷ்யாவில் அமைந்துள்ள இந்தப் பாலம் மிகப் பழமையானது, சுற்று கைப்பிடிகள் அற்றதுமாகும். இடையிடையே பல இணைப்புப் பலகைகள் காணாமல் போயுள்ள இந்தப் பாலம் மழைக்காலங்களில் மரண பயத்தை ஏற்படுத்தும் ஒன்றாகும்.
12. டிட்லீஸ் மலை தொங்கு பாலம், சுவிட்சர்லாந்து

சுவிஸ் ஆல்ப்ஸ் மலையின் மீது சுமார் 3,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொங்கு பாலம் மிக நேராக அமைந்துள்ள தொங்கு பாலங்களில் ஒன்று என்றாலும் பாதுகாப்பான பாலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
13. லங்காவி வான்வெளி தொங்கு பாலம், லங்காவி, மலேஷியா

வித்தியாசமான கட்டமைப்பில் அமைந்துள்ள இந்த தொங்கு பாலம் சுமார் 400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஒருமுறை நொறுங்கி விழப்போகிறது என்று கிளப்பிவிடப்பட்ட வாந்தியால் தற்காலிகமாக மூடப்பட்டு அதன் உறுதித்தன்மை மறுசோதனை செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.
14. விதான நடைபாலம்

கானா நாட்டின் காடுகளுக்குள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 40 அடி உயரத்தில் 1,000 மீட்டர் நீளத்திற்கு மரங்களுக்கு ஊடாக செல்லும் இந்தப் பாலத்தில் நடந்து செல்லும் போது குரங்குகள் நமக்கும், நாம் பறவைகளுக்கும் தொந்தரவாக இருப்போம்.
15. தி போன்ச்சர்டிரைன் கடல் பாலம், லூசியானா, அமெரிக்கா

16 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பாலமே நீரின் மேல் அமைந்துள்ள உலகின் மிக மிக நீளமான பாலமாகும். இந்த பாலத்தில் பயணம் செய்யும் போது 'இது முடிவேயில்லாத பாலத்தில் செல்கின்றோமோ' என்கிற மனநிலையை ஏற்படுத்துமாம்.
16. தி டிசெப்சன் கடவு பாலம், வாஷிங்டன், அமெரிக்கா

வாஷிங்டன் மாகாணத்தின் 2 தீவுகளை இணைப்பதற்காக இந்த பாலம் கட்டப்பட்டது. இதற்கு முன் இத்தீவுகளுக்குச் செல்ல படகுகள் மட்டுமே பயன்பட்டன. 180 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பாலம் மிகவும் பயமுறுத்தும் தோற்றம் கொண்டதாகும்.
17. ஏழு மைல் கடல் பாலம், ஃபுளொரிடா, அமெரிக்கா

இதற்கு முன்னிருந்த ஒரிஜினல் செவன் மைல் பிரிட்ஜ் நல்ல நிலையில் இருந்த போதும் சில படகுகள் கடந்து செல்ல தடையாக விளங்கியதாலும், புயல் காலங்களில் மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு கடக்க வேண்டியஅ ச்சுறுத்தல் நிலவியதாலும் அதை இடித்துவிட்டு இந்த புதிய 'தி செவன் மைல் பிரிட்ஜ்' எனும் புதிய பாலத்தை அமைத்துள்ளனர்.
18. ஹூசைனி தொங்கு பாலம்

பாகிஸ்தானின் ஹூன்ஸா ஆற்றின் மேல் இத்தகைய ஆபத்தான தொங்கு பாலங்கள் உள்ளன. எந்த நேரத்திலும் அறுந்து ஆற்றுக்குள் விழும் தன்மையுள்ள இந்த பாலங்களே மக்களின் இரத்த நாளங்கள் போல் இயங்குகின்றன.
19. குரங்கு பாலங்கள்

வியட்னாம் நாட்டின் மீக்கோங் டெல்டா பகுதிகளில் ஒரு மூங்கிலில் அமைந்த இந்த வகை பாலங்கள் காணப்படும். இதை குரங்குகள் தாவிக் கடப்பது போன்று கடப்பதால் இதற்கு குரங்கு பாலம் என காரணப் பெயர் வந்தது.
20. ராஜரீக பள்ளத்தாக்கு பாலம், கொலராடோ

அமெரிக்காவிலேயே மிகப்பெரும் உயரமான தொங்கு பாலம் இது, 1929 ஆம் ஆண்டு கட்டப்பட்ட போது இருமுனைகளிலும் 'வின்ட் கேபிள்கள்' (Wind Cables) எனப்படும் கம்பிகள் மூலம் இணைக்கப்படவில்லை. பின்னாளில் வின்ட் கேபிள்கள் மூலம் பாலம் பலப்படுத்தப்பட்டது. தற்போது சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் முக்கிய இடமாக திகழ்கிறது.
Source: topmanfun.com
தமிழில்:அதிரை நியூஸ்
No comments