புதுசு

மருத்துவத்தில் ஓர் மைல்கல்! மூளையை மட்டும் 36 மணிநேரங்கள் உயிர்ப்புடன் வைத்திருந்து சாதனை!!


நவீன மருத்துவத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. கண் (Eye), இதயம் (Heart Muscles), கணையம் (Pancreas), காது (Ear), எலும்புகள் (Bones), மூட்டுக்கள் (Limbs), கைகள் (Hands), விரல்கள் (Fingers), தோல் (Skin) மற்றும் சிறுநீர் பை (Bladder) போன்ற 10 பாகங்களை நாம் மாற்றிக் கொள்ள முடியும். மருத்துவ சாதனைகளால் பல மனித உயிர்களின் துடிப்புக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தள்ளிப்போடப்படுகின்றன என்றால் மிகையில்லை.

ஒவ்வொரு உயிரினத்தின் உடற்பாகங்களிலேயே மூளையே மிக பிரதானமானதாகும், மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் வார்த்தையில் 'மூளை ஓர் தலைமைச் செயலகம்'. இந்த தலைமைச் செயலகத்தை உடலிலிருந்து அகற்றி சுமார் 36 மணிநேரங்கள் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆராய்ச்சியின் முதற்கட்ட சோதனையில் மருத்துவ விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர் என்றாலும் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

அமெரிக்காவில் 1701 ஆம் ஆண்டு உருவான பழமையான 'யேல் யூனிவர்சிட்டியின்' (Yale University) நரம்பியல் துறை விஞ்ஞானி 'நினாத் செஸ்தான்' (Nuero-Scientist Nenad Sestan) என்பவர் சுமார் 100க்கு மேற்பட்ட பன்றிகளின் மூளைத் திசுக்களை பிரித்தெடுத்து செயற்கை முறையில் ஆக்ஸிஜனை வழங்கி அதன் இரத்த ஓட்டத்தை மீண்டும் இயங்கச் செய்ததன் மூலம் மூளையை சுமார் 36 நேரம் வரை உயிர்ப்புடன் வெற்றிகரமாக இயங்கச் செய்துள்ளார்.  (Researchers delivered oxygen to the cells via a system of pumps and blood maintained at body temperature)

இரத்த ஓட்டத்தின் மூலம் மூளையை உயிர்ப்புடன் வைத்திருப்பதன் வழியாக சில வகை புற்றுநோய்கள், நினைவாற்றல் இழப்பு (அல்சைமர்) போன்ற நோய்களுக்கு தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. மேலும் நினாத் செஸ்தான் மற்றும் 16 விஞ்ஞானிகள் அடங்கிய குழு மனித மூளையின் மீது இதே ஆராய்ச்சியை தொடர்வதற்கான அனுமதியையும், ஒத்துழைப்பையும் நேச்சர் சயின்ஸ் என்ற மருத்துவ இதழிடம் வேண்டியுள்ளனர். இந்தத் திட்டத்திற்கு BrainEx system என பெயரிட்டுள்ளனர்.

Source: Khaleej Times / AFP / Msn
தமிழில்: அதிரை நியூஸ்

No comments