புதுசு

பஹ்ரைன் வரலாற்றில் மிகப்பெரும் எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு!மிகச்சிறிய அரபு நாடான பஹ்ரைனின் முக்கிய பொருளாதார ஆதாரமாக உள்ளது பெட்ரோலிய உற்பத்தியே, பஹ்ரைனின் மொத்த வருவாயில் இதிலிருந்து மட்டும் சுமார் 80 % வருவாய் ஈட்டப்படுகிறது. வளைகுடா பிராந்தியத்திலேயே முதன்முதலாக 1932 ஆம் ஆண்டு பஹ்ரைனில் தான் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எண்ணெய் வயலில் இருந்து தற்போது நாளொன்றுக்கு 50,000 பேரல் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வருவதுடன் அபு சபா என்ற இந்த எண்ணெய் வயல் அண்டை நாடான சவுதி அரேபியாவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பஹ்ரைன் வரலாற்றிலேயே முதன்முதலாக மிகப்பிரமாண்ட எண்ணெய் வளமும், கேஸ் இருப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்புக்கு முன் பழைய எண்ணெய் வயல் மிக மிக குட்டியானது எனவும் பஹ்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய எண்ணெய் வயல் அல் கலீஜ் அல் பஹ்ரைன் பேசின் என்ற பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. The government said Sunday that the new resource is “understood to dwarf Bahrain’s current reserves.”


தமிழில்: அதிரை நியூஸ்

No comments