புதுசு

காஷ்மீர் சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கு: சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க முதல்வர் மெஹ்பூபா முடிவுகாஷ்மீர் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க முதல்முறையாக சிறப்பு நீதிமன்றம் அமைக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. முதல்வர் மெஹ்பூபா, தமது மக்கள் ஜனநாயக கட்சி அமைச்சரகள் மற்றும் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதில் கதுவா வலக்கை விசாரிக்க மாநிலத்திலேயே முதன்முறையாக சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்றம் அமைக்கப்பட்டால் 90 நாட்களுக்குள் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்கள் 4 பேரை பணிநீக்கம் செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஜம்முகாஷ்மீர் மாநிலம் கத்வா பகுதியில் 8 வயது சிறுமி 7 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் ஒரு சிறார் ஓய்வுபெற்ற அரசு ஊழியர், 4 காவலர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி வழக்கில் முதல்வர் மெஹ்பூபா எடுக்கும் நடவடிக்கைக்கு பல தரப்பிலும் ஆதரவு உள்ளது. ஆனால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கக்கோரி கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள பாஜக அமைச்சர்கள் 2 பேர் ராஜினாமா செய்துவிட்டனர். இதனால் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி- பாஜக கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.

No comments