புதுசு

கத்துவா, உன்னோ பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்




காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டது மற்றும் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் பெண் கற்பழிப்பு சம்பவங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐக்கியநாடுகள் சபை பெண்கள் அமைப்பின் தலைவியான மிலம்போ- நகோடா கூறுகையில், இந்த சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்கள் மனித சமுதாயத்துக்கே ஆபத்தானது என்றும் கூறினார்.

இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அது குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் பொறுப்பில் இருந்து நாம் விலகுவதாக அமையும் என்றார். மேலும் இந்த செயலில் ஈடுபடுபவர்கள் மீது எடுக்கப்படும் சட்ட ரீதியிலான தண்டனைகள் மூலமே கற்பழிப்பு-கொலை இல்லாத நிலை ஏற்படும் என்றார்.

No comments