புதுசு

நினைவுகள்30 வருடங்களுக்கு முன்பு இந்த கம்பர் அரசு உயர்நிலைப்பள்ளி (அப்போது) பல வகுப்புகள் கீற்றுக் கொட்டாய்களிலும் சில வகுப்புகள் கட்டிங்களிலும் இயங்கி வந்த காலம் அது.
சிறந்த பல ஆசிரியர்கள் இருந்தார்கள் TB சார், RT சார் , தம்பி சார், VP சார், MSK சார்,
(பல ஆசிரியர் நினைவில் உள்ளது ஆனால் பெயர் மறந்து விட்டது நண்பர்கள் தெரிந்தால் சொல்லவும்)

5 பீரியட் என்றால் துள்ளிக்குதித்து ஓடுவோம் , மதியவேளை வந்தால் பாலு தள்ளுவண்டி , ஆண்டு கடைசியில் ஆவலோடு எதிர்பார்க்கும் தேர்ச்சியா தேக்கமா என்ற ரிசல்ட்.
பசுமையான பல மரங்கள் சில நேரங்களில் மரத்தடி வகுப்புகள் .
இங்கு படித்த பல மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து பெருமை சேர்க்கிறார்கள் .
அண்ணன் தம்பிகளாக ஜாதி மதம் என்று பார்க்காமல் படித்தோம், இன்றுவரை அப்படிதான் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம், இதுதான் தேரழந்தூரின் பெருமை என்றால் அது மிகையாகது.
உங்கள் அனுபவங்களையும் பகிருங்கள்
தொகுப்பு: தேரழந்தூர் மீடியா

No comments