புதுசு

சவுதியில் படுபாதாளத்தில் வீழ்ந்த ரியல் எஸ்டேட் தொழில்!


சவுதி அரேபியாவில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மீது விதிக்கப்பட்ட கடும் தீர்வைகளை (Expat Levy) தொடர்ந்து வீடுகளை வாடகைக்கு விடும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

வெளிநாட்டினர் கூட்டம் கூட்டமாக சவுதியை விட்டு வெளியேறி (Exodus) வருவதால் பல வாடகை வீடுகள் காலியாக உள்ளன. மக்கள் வாடகை வீடுகளை விட்டு வெளியேறுவதை தடுக்கும் முகமாக பல்வேறு சிறப்புச் சலுகைகளை வழங்கத் துவங்கியுள்ளனர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர்.

உதாரணத்திற்கு, ஆண்டுக்கு 30,000 ரியால் வாடகைக்கு விடப்பட்ட வீடுகள் 26,000 ரியால் வரை குறைந்துள்ளன, மாதந்தோறும் வாடகை செலுத்தும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே குடியிருப்போர் காலி செய்து செல்லாமலிருக்க 3 மாதங்களுக்கு ஒருமுறை வாடகை செலுத்தலாம் என்றும் சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர் என்றாலும் இதனையெல்லாம் காது கொடுத்து கேட்கவோ, குடியேறவோ தான் ஆளில்லாமல் தவிக்கின்றனர்.

வீடுகள் தோறும் 'To Let' போர்டுகள் வரவேற்றுக் கொண்டுள்ள நிலையில் 3 மடங்கு ஏற்றப்பட்டுள்ள மின்சாரக் கட்டணமும் மக்கள் வாடகை வீடுகளை பெருமளவில் காலி செய்து கொண்டு செல்ல இன்னொரு முக்கிய காரணம் எனத் தெரிய வந்துள்ளது. பள்ளிக்கூடங்களும் மாணவர்கள் குறைவால் காற்று வாங்கத் துவங்கியுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்:அதிரை நியூஸ்

No comments