புதுசு

விளையாட்டுப் போட்டிகளில் வெளிநாட்டவர்கள் கலந்துகொள்ள அமீரக அரசு அனுமதி!


அமீரக அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள புதிய ஒப்புதல்களின்படி, அமீரகத்தில் வாழும் அனைத்து நாட்டு வீரர்களும் அமீரகத்தின் சார்பாக விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இப்புதிய சட்டத்தின்படி அமீரக தாய்க்கும் வெளிநாட்டு தந்தையர்களுக்கும் பிறந்த குழந்தைகள், அமீரக பாஸ்போர்ட் வைத்திருப்போர், அமீரகத்தில் பிறந்த வெளிநாட்டவர்கள் உட்பட அமீரக ரெஸிடென்ஸ் விசாவில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டவர்களும் அமீரகத்தில் நடைபெறும் தேசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் அமீரகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொண்டு விளையாடலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்குமுன் சிறப்பு அனுமதியின் பேரில் ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் அமீரகத்தின் சார்பாக சில விளையாட்டு வீரர்கள் பங்குபெற்று வருகின்றனர். மால்டோவா நாட்டைச் சேர்ந்த 3 ஜூடோ விளையாட்டு வீரர்கள், 2 எத்தியோப்பிய ஓட்டப் பந்தய வீரர்கள் என கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் அமீரகத்தின் சார்பாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Source: WAM / Emirates 247
தமிழில்: அதிரை நியூஸ்

No comments