புதுசு

தினமும் 100 முறை பரிசோதிக்கப்பட்டு வழங்கப்படும் புனித ஜம்ஜம் தண்ணீர்!சவுதி அரேபியா, மெக்கா புனித ஹரம் ஷரீஃப் வளாகத்தின் அடியில் அமைந்துள்ளது வாழும் அற்புதங்களில் ஒன்றான புனித ஜம்ஜம் கிணறு. இதிலிருந்து இறைக்கப்படும் தண்ணீர் அது சேமித்து வைக்கப்பட்டுள்ள இடம், நீர் வழங்கும் இடம் மற்றும் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் போன்றவற்றிலிருந்து தினமும் 100 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.

புனிதப் பள்ளியினுள் மற்றும் அதன் வளாகத்தில் 660 குடிநீர் மையங்கள் உள்ளதுடன் சுமார் 25,000 கேன் கன்டைனர்கள் வழியாகவும் ஜம்ஜம் தண்ணீர் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வணக்கசாலிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் 352 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நீர் தொட்டிகளிலும் நீர் சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது என இரு புனிதப் பள்ளிகளின் நிர்வாகத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்:அதிரை நியூஸ்

No comments