புதுசு

வளைகுடா நாடுகள் உட்பட பல நாடுகளில் நாளை (மே17) வியாழன் முதல் புனித நோன்பு தொடக்கம்!


வளைகுடா நாடுகள் உட்பட பல நாடுகளில் நாளை வியாழன் முதல் புனித நோன்பு துவங்குகிறது

653. ”ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1906 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

656. ”பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1909 அபூஹுரைரா (ரலி).

நேற்றிரவு ஷஃபான் மாதத்தின் 29வது இரவு பூர்த்தியானதை தொடர்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளதன் அடிப்படையில் உலகெங்கும் பிறை பிறப்பு கண்காணிக்கப்பட்டது எனினும் எங்கும் பிறை தென்படவில்லை என்று வந்த செய்திகளை அடுத்து வளைகுடா அரபுநாடுகளின் அரசுகள் ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்தும், நாளை வியாழனை (மே 17) புனித ரமலான் மாதத்தின் முதல் நாள் எனவும் அறிவிப்புச் செய்தன.

மே 17 முதல் புனித ரமலான் மாத நோன்புகள் துவங்குவதாக இதுவரை அறிவித்துள்ள முஸ்லீம் நாடுகள் உள்ளிட்ட முக்கிய உலக நாடுகள் வருமாறு:
 
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், லெபனான், ஜோர்டான், ஈராக், மலேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, தென் கொரியா, ஜப்பான் ஆகியன அறிவித்துள்ளன.

Sources: Gulf News & islamkalvi.com
தமிழில்: அதிரை நியூஸ்

No comments