புதுசு

பெற்றோர்கள் வாக்களித்தால் குழந்தைகளுக்கு 4 கூடுதல் மதிப்பெண்கள்!கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் வாக்களிக்கும் பெற்றோரின் குழந்தைகளுக்கு 4 கூடுதல் மதிப்பெண்கள் வழங்க அம்மாநில ஆங்கில மொழிவழி பள்ளி மேலாண்மைக் கழகம் முடிவு செய்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் வருகிற மே 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் வாக்களிக்கும் பெற்றோரின் குழந்தைகளுக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அம்மாநில ஆங்கில மொழிவழி பள்ளி மேலாண்மைக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில ஆங்கில மொழிவழி பள்ளி மேலாண்மை கழக பொதுச்செயலாளர் ஷஷி குமார் கூறுகையில், சட்டசபை தேர்தலில் பெற்றோர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.

வாக்களித்த பெற்றோர்கள் விரலில் வைக்கப்பட்ட மையை பள்ளியில் காண்பிக்க வேண்டும். அப்படி தந்தை காட்டினால் இரண்டு மதிப்பெண்களும், தாய் காட்டினால் இரண்டு மதிப்பெண்களும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அதன்படி மொத்தமாக ஒரு குழந்தைக்கு நான்கு மதிப்பெண்கள் கிடைக்கும். மதிப்பெண்களுக்காக பெற்றோரை வாக்களிக்க குழந்தைகள் வலியுறுத்துவார்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், நாங்கள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு கிடையாது. வாக்களிக்க வேண்டும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். வாக்களித்த பின்னர் பெற்றோரை மாணவர்கள் பள்ளிக்கும் அழைத்து வரலாம். குலுக்கல் முறையில் பரிசும் வழங்கப்படும், என்று அவர் கூறியுள்ளார்.

No comments