புதுசு

வட இந்தியாவில் புழுதிப்புயல் மற்றும் கனமழை - 74 பேர் பலி


 வட இந்தியாவில் புழுதிப்புயல் மற்றும் கனமழைவட இந்திய மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான புழுதிப்புயல் மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக குறைந்தது 74 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.


புதன்கிழமையன்று அடித்த பலமான புழுதிப்புயலால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மரங்கள் சாய்ந்தன. மேலும், பல வீடுகள் பாதிக்கப்பட்டதோடு, கால்நடை உயிரினங்கள் பல உயிரிழந்தன.
 வட இந்தியாவில் புழுதிப்புயல் மற்றும் கனமழை

 வட இந்தியாவில் புழுதிப்புயல் மற்றும் கனமழை


கடுமையான மின்னல் தாக்கியதில் வீடுகள் உடைந்து, அதில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

நிவாரணப் பணிகளுக்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் கூறியுள்ளார்.

 நன்றி:bbctamil

No comments