புதுசு

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியீடு: 97.05 சதவீதம் பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடம்

 

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 91.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் 94.1%, மாணவர்கள் 87.7% தேர்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு விகிதத்தில் 97.05 சதவீதம் பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 96.35 சதவீதம் பெற்று ஈரோடு மாவட்டம் 2ம் இடத்தை பிடித்துள்ளது. 96.18 சதவீதம் பெற்று திருப்பூர் மாவட்டம் 3 வது இடத்தை பிடித்துள்ளது. ராமநாதபுரம் 95.88 சதவீதம் தேர்ச்சி பெற்று 4 வது இடத்தில் உள்ளது. நாமக்கல் மாவட்டம் 95.72 சதவீதம் பெற்று 5 வது இடத்தில் உள்ளது. சிவகங்கை மாவட்டம் 95.60 சதவீதம் பெற்று 6 வது இடத்தில் உள்ளது.

238 அரசு பள்ளிகளில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 1907 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன. 50 மாணவர்கள், 181 மாணவிகள் 1,180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 1,151-1180 மதிப்பெண்களை 4848 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். 1126-11150 மதிப்பெண்களை 8510 மாணவ,மாணவிகள் பெற்றுள்ளனர். 1101-1125 மதிப்பெண்களை 11,739 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். 1001-1100 மதிப்பெண்களை 71,368 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். 901-1000 மதிப்பெண்களை 1,07,266 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்.

No comments