புதுசு

சவுதியில் தாயும் ~ மகளும் பல்கலைக்கழகத்தில் பட்டம் வென்று அசத்தல்!


சவுதியின் அப்ஹா (Abha) நகரைச் சேர்ந்தவர் சாலிஹா அசீரி. இவரும் இவருடைய மகளும் படித்து பட்டதாரிகளாகி அசத்தியுள்ளதுடன் கல்விக்கு வயது ஓர் தடையில்லை என நிரூபித்துள்ளனர். அப்ஹாவிலுள்ள கிங் காலித் பல்கலைக்கழகத்தில் தாய் சாலிஹா 'ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு' (Media and communications) துறையிலும், அவருடைய மகள் 'மாரம்' (Maram) வர்த்தக நிர்வாகவியலிலும் (Business administration) ஒரே சமயத்தில் பட்டம் வென்று அசத்தியுள்ளனர்.

சாலிஹா உயர்நிலை பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது திருமணமாகி கிழக்கு மாகாணத்திற்கு (தம்மாம் பிரதேசம்) குடியேறியதால் அவர் படிப்பை கைவிட வேண்டியிருந்ததுடன் அதற்குப்பின் பல்வேறு குடும்பப் பொறுப்புக்களால் படிப்பைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாதிருந்தது. இந்நிலையில் அவருடைய மகள் 'மாரம்' ஓரளவு வளர்ந்து நடுநிலை பள்ளிப்படிப்பை முடித்தநிலையில் சற்றே பாரம் குறைய தனது நெடுநாள் கனவான படிப்பை தொடர முடிவு செய்து படிப்பை தொடர்ந்து இன்று பட்டதாரியாக உருவெடுத்துள்ளார்.

தான் படிக்கும் போது தன்னுடைய குடும்பத்தை கவனித்துக் கொண்ட குழந்தைகள், உடன்பிறந்தவர்கள், நண்பர்கள், படிப்பை தொடர ஊக்கமளித்த தாய், கணவர் என அனைவருக்கும் சந்தோஷ பெருக்குடன் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Source: Saudi Gazette
தமிழில்:அதிரை நியூஸ்

No comments