புதுசு

உம்ரா யாத்ரீகர்களை வரவேற்க தயார் நிலையில் புனித மக்கா ~ மதீனா நகரங்கள்!

 புனித ஹஜ் கடமைக்கு அடுத்து புனித ரமலான் மாதத்தின் போது உலகெங்கிலுமிருந்து முஸ்லீம்கள் பெருமளவில் உம்ரா யாத்திரைக்காக புனித நகரங்களை நோக்கி வருவார்கள். இவர்களை வரவேற்று தேவையான உதவிகளை செய்து தர பல்வேறு அரசு நிறுவனங்களும் தயார் நிலையில் உள்ளதுடன் எதிர்வரும் புதன்கிழமை முதல் தங்களின் களப்பணிகளை ஆரம்பம் செய்யவுள்ளனர்.

இந்த சேவைகள் இருகட்டங்களாக பிரிக்கப்பட்டு முதற்கட்டமாக ரமலான் பிறை 1 முதல் 20 வரையும் பின்பு இரண்டாம் கட்டமாக பிறை 21 முதல் 30 வரையும் தேவைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக புனித மக்கா நகர அமீர் அலுவலகம், இரு புனிதப் பள்ளிகளின் நிர்வாகத் தலைமையகம், இருநகரங்களின் மேயர் அலுவலகங்கள், புனிதப்பள்ளிகளின் பாதுகாப்பு படையினர், போலீஸ், போக்குவரத்து துறையினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினரும் இந்த உம்ரா சீஸனை எதிர்கொள்ளவும், யாத்ரீகர்களின் சிரமத்தில் உதவவும் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை சுமார் 5.4 மில்லியன் யாத்ரீகர்கள் உம்ரா செய்துள்ளனர். இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டைவிட சுமார் 195,000 பேர் கூடுதலாக இந்த வருடம் உம்ரா செய்துள்ளனர். சுமார் 1 மில்லியன் படுக்கை வசதிகளுடன் சுமார் 1,314 ஹோட்டல்கள் இயங்குகின்றன.

82 போக்குவரத்து நிறுவனங்கள் மொத்தமாக தினமும் சுமார் 25,000 டிரிப்புகள் அடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன் தினமும் சுமார் 40 மில்லியன் பேரை புனித ஹரத்திலிருந்து நகரைச் சுற்றியுள்ள பிற புனிதத்தலங்களுக்கு அழைத்துச் செல்ல ரமலான் மாதம் முழுவதும் ஷட்டில் பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

புனித நகரங்களுக்குள் சிறிய ரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 2,000 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. மேலும் புனித நகரங்களைச் சுற்றி சுமார் 2.5 பார்க்கிங் ஸ்லாட்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Source: Saudi Gazette
தமிழில்:அதிரை நியூஸ்

No comments