புதுசு

மஸ்ஜிதுன்நபவியில் முஹமது (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலம் அமைந்துள்ள பகுதிக்கு புதிய கார்பெட்!

 

புனிதமிகு மதினாவில் அமைந்துள்ள மஸ்ஜிதுன்னபவியில் அல்லாஹ்வின் தூதர் முஹமது நபி (ஸல்) அவர்களின் அடக்கத்தலமும் அவர்களின் இருபுறமும் கண்ணியமிகு தோழர்கள் அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோர்களின் அடக்கத்தலங்களும் அருகருகே அமைந்துள்ளன.

மதினாவிற்கு ஜியாரத் செய்யச் செல்லும் அனைத்து முஸ்லீம்களும் ரசூலே கரீம் முஹமது நபி (ஸல்) அவர்களுக்கு அங்கு ஸலாமும் ஸலவாத்தும் சொல்லிச் செல்வார்கள். ஜியாரத் செய்வோர் கடந்து செல்லவதற்காகவே அங்கு சிறப்பு நடைபாதையும் உள்ளது. இந்த நடைபாதையில் இதுவரை இருந்த சிவப்புநிற கார்பெட் அகற்றப்பட்டு புதிய பச்சை நிற கார்பெட் போடப்பட்டுள்ளது.

பாப் அல் ஸலாம் எனும் நுழைவாயில் முதல் பாபே பகீ நுழைவாயில் (Bab Al-Salam to Bab-e-Baqi) வரை சுமார் 250 புதிய கார்பெட்டுக்களை இரு புனிதப் பள்ளிகளுக்கான தலைமை நிர்வாகம் அமைத்து தந்துள்ளது. இந்த கார்பெட்டுகள் சவுதி அரேபிய நெசவாளர்களால் கைகளால் பின்னப்பட்டதாகும்.(New green carpets produced by Saudi hands)

Source: Saudi Gazette


No comments