புதுசு

புனித ரமலான் மாதத்தில் அபுதாபியில் இலவச பார்க்கிங் நேரம் அறிவிப்பு!


புனித ரமலான் மாதத்தின் போது அபுதாபியில் இலவச பார்க்கிங் நேரங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அபுதாபியில் எதிர்வரும் புனித ரமலான் மாதத்தின் போது கட்டணம் மற்றும் இலவச பார்க்கிங் நேரங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை தினமும் காலை 9 முதல் பகல் 2 மணி வரை பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும். பின்பு இரவு 9 மணிமுதல் அதிகாலை 2.30 மணிவரையும் பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும்.

வியாழக்கிழமைகளில் காலை 9 மணிமுதல் பகல் 2 மணிவரையும் பின்பு இரவு 9 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்த வேண்டும்.

தினமும் பகல் 2 மணிமுதல் இரவு 9 மணிவரை பார்க்கிங் இலவசம்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 12 மணிமுதல் (அதாவது வியாழன் பின்னிரவு 12 மணிமுதல்) சனிக்கிழமை காலை 8.59 மணிவரையும் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்தத் தேவையில்லை.

தராவிஹ் எனும் இரவுத் தொழுகைகள் நடைபெறும் நேரத்தில் மட்டும் பள்ளியை சுற்றி பார்க்கிங் கட்டணம் செலுத்த தேவையில்லை எனினும் வாகனங்களை பிறருக்கும், போக்குவரத்திற்கும் இடைஞ்சலாக பார்க்கிங் செய்யக்கூடாது.

அதேபோல், ரெஸிடென்ஷியல் ஏரியாக்களில் உள்ள பெர்மிட் பார்க்கிங் ஏரியாவிலும் இரவு 9 மணிமுதல் காலை 8 மணிவரை பார்க்கிங் சட்டங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

Source: Gulf News
தமிழில்:அதிரை நியூஸ்

No comments