புதுசு

மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் களப்பணியாற்றும் தன்னார்வலப் பெண்கள்!


ஆண்களைப் போலவே பெண் தன்னார்வத் தொண்டர்கள் பலரும் புனித மதினாவின் மஸ்ஜிதுன்னபவியில் புனித ரமலான் மாதத்தின் போது பெண் யாத்ரீகர்கள் மற்றும் வழிபாட்டாளர்களுக்கு பல்வேறு வகையிலும் உதவி வருகின்றனர். இவர்கள் அனைவரும் செம்பிறை சங்கத்தின் கீழ் தன்னார்வத் தொண்டர்களாக இணைந்து உதவிகள் புரிகின்றனர்.

இந்த வருடம் மஸ்ஜிதுன்னபவியில் சுமார் 1,150 புனித ரமலானின் ஆரம்பம் முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு 6 மணிநேரத்திற்கு ஒரு ஷிப்ட் என 24 மணிநேரமும் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 12 ஆண்டுகளாக செம்பிறைச் சங்கத்தின் சார்பாக தன்னார்வக் குழுக்களின் சூப்பர்வைஸராக பணியாற்றி வரும் சகோதரி ஜவ்ஹரா திலான் அவர்கள் கூறியதாவது, நாங்கள் அனைத்து நாடுகளையும் சேர்ந்த பெண்களை வயது வித்தியாசமின்றி எங்களுடன் இணைந்து பணியாற்ற வரவேற்கின்றோம். புனித ரமலான் மாதத்தில் பெண் தன்னார்வ தொண்டர்கள் எந்நேரமும் மஸ்ஜிதுன்னபவியில் உதவி தேவையுடையோருக்கு சேவை செய்திடும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்கின்றோம். தன்னார்வ தொண்டர்களுக்கு முறையான முதலுதவி பயற்சியும் வழங்கப்படுகிறது.

மேலும், பெண் தன்னார்வத் தொண்டர்கள் அவசரகால உதவிகள், மருத்துவ முதலுதவிகள், மருத்துவ சாதனங்களை கையாளுவதற்கான திறன்கள், எந்தந்த உயர் அதிகாரிகளை எந்தந்த தேவைகளுக்காக தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சிகளை அவர்கள் பெறுகின்றனர். இந்த வருடம் வாக்கி டாக்கி மற்றும் தகவல் தொடர்புகளுக்கான புதிய தொழிற்நுட்ப கருவிகளும் வழங்கப்பட்டுள்ளதுடன் இவர்களின் சேவைகளை உடனுக்குடன் செம்பிறைச் சங்கம் சார்பாக உடனுக்குடன் ஆவணப்படுத்தப்பட்டு புனித ரமலானுக்குப் பின் ஊக்கச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

இவ்வருடம் இதுவரை பலருக்கும் ஸ்பாட் உதவிகள் செய்யப்பட்டுள்ளதுடன் பலர் அருகாமையிலுள்ள மருத்துவ மையங்களுக்கும் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் தொழுது கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்ட ஒரு பெண்ணுக்கும், குளியலறையில் வழுக்கி விழுந்து இடுப்பு எலும்பு முறிந்த ஒரு பெண்ணிற்கும் உடனடி உதவிகள் செய்யப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Source: Saudi Gazette
தமிழில்: அதிரை நியூஸ்

No comments