புதுசு

புனித ரமலான் மாதத்தில் அமீரகத்தில் பள்ளிக்கூடங்கள் செயல்படும் நேரம் அறிவிப்பு!
 புனித ரமலான் மாதத்தின் போது அமீரக பள்ளிக்கூடங்கள் 5 மணிநேரங்கள் மட்டுமே இயங்கும் என்றும், கடந்த ஆண்டைப் போலவே மாணவர்களுக்கு காலை 8 மணிக்கு திறக்கப்படும் பள்ளிகள் பகல் 1 மணிவரையும், மாணவிகளுக்கு காலை 8.30 மணிக்கு திறக்கப்படும் பள்ளிகள் பகல் 1.30 வரையும் குறுகிய இடைவேளைகளுடன் செயல்படும் என அமீரக கல்வித்துறைக்கான ஆணையம் (The Knowledge and Human Development Authority - KHDA) தெரிவித்துள்ளது.

வெப்பம், சோர்வு, களைப்பு போன்றவற்றை தவிர்ப்பதற்காக புனித ரமலான் மாதத்தின் போது உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு வகுப்புக்களை நடத்தக்கூடாது எனவும், வகுப்புக்களுக்கு வெளியே எத்தகைய வெளிப்புற நடவடிக்கைகளும் நடைபெறக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்:
அதிரை நியூஸ்

No comments