புதுசு

புனித ரமலானையொட்டி அபுதாபி, ஷார்ஜாவில் கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை!

 புனிதமிகு ரமலான் மாதம் இன்னும் ஓரிரு நாட்களில் துவங்கவுள்ளதால் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு அபுதாபி எமிரேட்டில் சிறை சென்ற கைதிகளிலிருந்து 935 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டார் அபுதாபியின் ஆட்சியாளரும் அமீரகத்தின் ஜனாதிபதிமான ஷேக். கலீஃபா பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்கள்.

அதேபோல், ஷார்ஜா சிறைகளில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கைதிகளிலிருந்து 304 பேரை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டார் ஷார்ஜா எமிரேட்டின் ஆட்சியாளர் டாக்டர். ஷேக் சுல்தான் பின் முஹமது அல் கஸீமி அவர்கள்.

புனிதமிகு ரமலான் ஆரம்பமாவதை தொடர்ந்து விடுதலை செய்யப்படும் இந்த கைதிகள் அனைவரும் சிறையில் நன்னடத்தை சான்று பெற்றவர்கள் என்பதுடன் விடுதலைக்கு பின் புனித ரமலானை குடும்பத்துடன் அனுசரித்து புதுவாழ்வை துவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மேற்காணும் இரு விடுதலை செய்திகளிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்:
அதிரை நியூஸ்

1 comment:

  1. Good,but intention ramadan which is welcomed, but for his individual self popularity which is shame

    ReplyDelete