புதுசு

துபையில் தங்கம் மொத்த விற்பனை வாட் வரி நீக்கம்!துபையில் கடந்த ஜனவரி மாதம் முதல் அனைத்து பொருட்களின் மீதும் 5% வாட் வரி விதிக்கப்பட்டது. துபையின் முக்கிய வர்த்தகங்களில் ஒன்று தங்கம். இந்த 5% வாட் வரி (VAT Tax) விதிப்பு மற்றும் 5% இறக்குமதி வரிவிதிப்பு (Import Tax) போன்ற இரட்டை வரி தாக்குதல்களால் கடந்த 4 மாதங்களில் துபையின் தங்க நகை விற்பனை பெருமளவு முடங்கியதை தொடர்ந்து தங்க நகைகள் மொத்த விற்பனை மட்டங்களில் (Only at Whole Sale Level) வசூலிக்கப்பட்டு வரும் 5% வாட் வரியை மட்டும் துபை அரசு நீக்கியுள்ளது.

இந்த சலுகையின் மூலம் தங்கம் சில்லறை விற்பனை ஓரளவு மீண்டும் சூடுபிடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும் சில்லறையில் தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதன் பயனை நேரடியாக அனுபவிக்காத வரை பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படப் போவதில்லை என்றும் சில தஙக நகை வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்:அதிரை நியூஸ்

No comments