புதுசு

ரோந்து பணியில் டிரைவரில்லா போலீஸ் வாகனங்களை ஈடுபடுத்த முடிவு!துபையில் விரைவில் டிரைவரில்லா போலீஸ் வாகனங்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன

துபையில் மிக விரைவில் அனைத்து வகையான போலீஸ் வாகனங்களிலும் டிரைவரில்லாமல் வாகனத்தை இயக்கும் தொழில்நுட்பம் பொருத்தப்படவுள்ளன. 2020 ஆம் ஆண்டிற்குள் துபையில் இயங்கும் அனைத்து போலீஸ் வாகனமும் இந்த தொழிற்நுட்பத்தை முழுமையாக பெற்றிருக்கும். (Dubai city’s streets will be patrolled by driverless vehicles by 2020)

அனைத்து வாகனங்களுக்கும் இப்புதிய தொழிற்நுட்பத்தை பொருத்தும் பணியை துபையை சேர்ந்த Acacus Technologies என்கிற தனியார் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே துபையில் அதிவேக ரயில் மற்றும் பறக்கும் டேக்ஸிக்களையும் (high-speed trains and flying taxi) அறிமுகப்படுத்தி இயக்க அனுமதிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

துபை போலீஸார் வசம் மிக உயர்ரக கார்களான லம்போர்கினி, அஸ்டோன் மார்ட்டின் (Lamborghini and Aston Martin model) போன்ற வாகனங்களும் உள்ளன. இந்த நவீன ரக கார்களிலும் டிரைவரில்லாமல் இயக்கத் தேவையான நவீன தொழிற்நுட்பக் கருவிகள் பொருத்தப்படவுள்ளன.
Source: Gulf Newsதமிழில்:அதிரை நியூஸ்

No comments