புதுசு

முஸ்லீம்களை சீண்டி அற்ப விளம்பரம் பெற முயலும் ஜெர்மனியின் மதுபான நிறுவனம்!
ஜெர்மனியின் மான்ஹெய்ம் நகரத்தில் செயல்படும் ஒர் மதுபான உற்பத்தி நிறுவனம் தனது பீர் பாட்டில்களின் மேல்மூடிகளின் மீது முஸ்லீம்களின் உயிர்நாதமான 'லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரஸூலல்லாஹ்' என்பதை தாங்கி நிற்கும் சவுதி அரேபியாவின் கொடியை அச்சிட்டு தங்களது நிறுவன மதுபான தயாரிப்புகளுக்கு அற்ப விளம்பரம் தேட முயன்றுள்ளனர்.

உலக முஸ்லீம்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ள இச்சம்பவம் பற்றி கடும் அதிருப்திகள் எழுந்துள்ளதுடன் சம்பந்தப்பட்ட மதுபான நிறுவனம் இந்த மதுபான பாட்டில்களை சந்தையிலிருந்து முழுமையாக திரும்பப் பெற்றுக் கொண்டு முஸ்லீம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது சம்பந்தமான ஜெர்மனி அரசாங்கத்திடம் சவுதி அரேபியாவின் தூதர் புகார் அளித்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களிலும் முஸ்லீம்களும், முஸ்லீம் அல்லாத பொதுமக்களும் கடும் கண்டனங்களை எழுப்பி வருவதுடன் 'குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க உங்களுக்கு வேறுவழி தெரியவில்லையா? என்றும், மதுபானம் இஸ்லாத்தில் முற்றிலும் தடைசெய்யப்பட்ட ஒன்று அதிலும் அதன் ஏகத்துவ கலிமாவை மூடியின் மீது அச்சிட்டு குப்பையில் எறியுமாறு செய்துள்ளது கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அப்படி ஏதும் நிகழ்ந்தால் அதற்கு அம்மதுபான நிறுவனமே பொறுப்பு என்றும் அப்படியேதும் அசம்பாவிதம் ஏற்படுமுன் தவறை திருத்திக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.

குடிகார நாய்களின் ஈனப்புத்தி!

Source: Saudi Gazette
தமிழில்: அதிரை நியூஸ்

No comments