புதுசு

மக்காவில் புனித ரமலானின் கடைசி 10 நாட்களுக்கான ஹோட்டல் கட்டணங்கள் 80% உயர்வு!


மக்காவில் புனித ரமலானின் கடைசி 10 நாட்களுக்கான ஹோட்டல் கட்டணங்கள் 80% உயர்ந்தது.

புனித மக்காவிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் அப்பார்ட்மெண்ட்டுகளின் கட்டணங்கள் கடந்த மாதத்து முன்பதிவுகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 80 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடைசி 10 இரவுகளின் நாள் ஒன்றுக்கு சுமார் 800 ரியால்கள் முதல் 1,000 ரியால்கள் வரை உயர்ந்துள்ளது இவை ஹரமிலிருந்து சற்று தூரத்தில் இருப்பவை ஆனால் ஹரம் அருகிலிருக்கும் ஹோட்டல்கள் நாள் ஒன்றுக்கு 1,500 ரியால்களை வரை உயர்த்தியுள்ளன.

இவ்வருட ஹோட்டல் வருவாய்கள் சுமார் 700 மில்லியன் ரியால்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் மக்கா நகரின் மத்தியில் அமைந்துள்ள ஹோட்டல்களின் வருவாய் சுமார் 70 சதவிகிதமாக இருக்கும் வாய்ப்பும் தெரிகின்றது. தற்போது நகரின் மத்தியில் உள்ள ஹோட்டல்கள் நாள் ஒன்றுக்கு 900 ரியால்கள் முதல் 1,500 ரியால்கள் வரை கட்டணம் வசூலிக்கின்றன. அதேவேளை சற்று தூரப்பகுதிகளில் அமைந்துள்ள ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் 800 ரியால்கள் முதல் 1,200 ரியால்கள் வரை பெறுகின்றன.

ஒரு மற்றும் இரு நட்சத்திர ஹோட்டல்கள் இந்த ரமலான் மாதம் முழுவதுமே ஒரு அறைக்கு 8,000 ரியால்களை சராசரி வருமானமாக பெறுகின்றன. புனித மக்காவில் மட்டும் சுமார் 1,200 லைசென்ஸ் பெற்ற ஹோட்டல்கள் இயங்குகின்றன. இவற்றிலுள்ள சுமார் 90,000 அறைகளில் சுமார் 1 மில்லியன் உம்ரா யாத்ரீகர்கள் தங்க இயலும் என புனித மக்காவின் சுற்றுலா மற்றும் தேசிய மரபுரிமைக்கான சவுதி ஆணையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Source: Saudi Gazette
தமிழில்: அதிரை நியூஸ்

No comments