புதுசு

அமீரகத்திற்கு தனியாக வரும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடு (முழு விவரம்)


அமீரகத்திற்கு தனியாக வரும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பெற்றோர்களின் அங்கீகாரக் கடிதம் கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தை கடத்தல் சம்பவங்களை தடுக்குமுகமாக அமீரக குடியேற்றத் துறை, துபை போலீஸ் மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனம் ஆகியவை நடப்பு ஜூன் 1 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறார்கள் விமானங்களில் பெற்றோர்கள் இன்றி தனியாக பயணிக்க வேண்டுமாயின் கட்டாயம் பெற்றோர்களின் ஒப்புதல் கடிதங்களை (Authorisation letter) இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளன.

இந்த ஒப்புதல் அங்கீகாரக்கடிதம் ஒரு விண்ணப்பம் பாரம் வடிவில் வழங்கப்படும். இவற்றில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்வதுடன் அமீரகத்தில் குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்கள் குறித்த விபரங்களையும் குறிப்பிட வேண்டும். பெற்றோர்கள் இன்றி குடும்ப உறவுகள் மற்றும் காப்பாளர்களுடன் வருகை தரும் குழந்தைகளுக்கும் இது பொருந்தும்.

தனியாக பயணிக்கும் சிறார்களை சம்பந்தப்பட்ட விமான நிறுவன ஊழியர்களே பெற்றோர்களின் அங்கீகாரக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர்களிடம் துபை இமிக்கிரேசன் அதிகாரிகளின் சரிபார்ப்பிற்குப் பின் விமான நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபரிடம் சிறார்களை ஒப்படைப்பர்.

இந்த நடைமுறையில் தவறுகள் ஏதும் நிகழ்ந்தாலோ அல்லது விண்ணப்பக் கடிதத்தில் முறையாக விபரங்கள் குறிப்பிடப்படவில்லை என்றாலோ அல்லது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்தாலோ சிறார்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பதுடன் அமீரகத்தில் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வருபவருக்கு விசாரணைக்குப் பின் அபராதம் மற்றும் சிறை தண்டனைகள் வரை கிடைக்கலாம் என தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

Source: Khaleej Times / PTI / Msn
தமிழில்:அதிரை நியூஸ்

No comments