புதுசு

அமீரகத்தில் அட்னாக் பெட்ரோல் நிலையங்களில் ஜூன் 30 முதல் 10 திர்ஹம் சேவைக் கட்டணம்!

 துபை நீங்கலாக அபுதாபி, ஷார்ஜா மற்றும் வட அமீரக பகுதிகளில் அபுதாபி எமிரேட்டுக்கு சொந்தமான அட்னாக் (Adnoc) பெட்ரோல் நிலையங்கள் இயங்குகின்றன. அபுதாபி எமிரேட்டுக்குள் இயங்கும் அட்னாக் பெட்ரோல் நிலையங்களில் எதிர்வரும் ஜூன் 30 ஆம் தேதி முதல் 10 திர்ஹம் சேவைக்கட்டணம் விதிக்கப்படவுள்ளது ஆனால் வட அமீரக பகுதிகளான புஜைரா, அஜ்மான், ராஸ் அல் கைமா மற்றும் உம்மல் குவைனில் சோதனை முயற்சிகள் தொடர்வதால் இங்கு பின்னொரு நாளில் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் சுயமாக அட்னாக் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டால் கூடுதல் சேவைக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை, அதேபோல் முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளும் சேவைக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தற்போது நடைமுறையிலுள்ள வழமைபோல் அட்னாக் ஊழியர்களின் உதவியுடன் பெட்ரோலை நிரப்ப விரும்பினால் (premium Services) ஒவ்வொரு சர்வீஸிற்கும் கூடுதலாக 10 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கூடுதல் சேவைக் கட்டணத்திற்காக தரப்படும் ரசீதை கொண்டு அட்னாக் பெட்ரோல் நிலையங்களில் கார் வாஷ் செய்யும் போது அல்லது அட்னாக் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது குறிப்பிட்ட விகிதத் தள்ளுபடியை 30 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம்.

அட்னாக் நிலையங்களில் பெட்ரோல் கட்டணம் செலுத்த புதிய தொழிற்நுட்பம் அறிமுகம்:
வாகனங்களின் பெட்ரோல் டேங்க் அருகே 'ஸ்மார்ட் டேக்' (Smart Tag) ஒன்று பொருத்தப்படும். Radio Frequency Identification (RFID)  எனும் தொழிற்நுட்பத்தில் இயங்கும் இந்த டேக் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பியதற்கு ஏற்ப கட்டணத்தை உங்களுடைய பெட்ரோல் ப்ரீ பெய்டு கார்டுகள், எமிரேட்ஸ் ஐடிகள் மற்றும் அட்னாக் பிளஸ் கார்டுகள் ஆகியவற்றிலிருந்து அதுவே கழித்துக் கொள்ளும். இந்த ஸ்மார்ட் டேக்குகளை பொருத்திக் கொள்ள முன்வரும் முதல் 2 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இலவசம் அதற்குப் பின் 50 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும்.Source: Gulf News
தமிழில்:
அதிரை நியூஸ்

No comments