புதுசு

துபையில் நோன்பு பெருநாளை முன்னிட்டு 4 தினங்கள் இலவச பார்க்கிங் அனுமதி!


எதிர்வரும் ஈகைப் பெருநாள் விடுமுறைகளை முன்னிட்டு துபையில் 4 நாட்களுக்கு இலவச பார்க்கிங் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது ஆனாலும் அடுக்குமாடி பார்க்கிங்குகளில் மட்டும் வழமைபோல் கட்டணம் வசூலிக்கப்படும்.

எதிர்வரும் ரமலான் பிறை 29 (வியாழன்) காலை முதல் ஷவ்வால் பிறை 3 வரை பார்க்கிங் கட்டணம் செலுத்த தேவையில்லை அதாவது ஜூன் 14 முதல் ஜூன் 17 வரை. மீண்டும் பார்க்கிங் கட்டண நடைமுறைகள் ஜூன் 18 (ஷவ்வால் பிறை 4, திங்கட்கிழமை) காலை 8 மணிமுதல் வழமையான நடைமுறைக்கு திரும்பும்.

அதேபோல் துபை போக்குவரத்து துறையின் கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர்கள் எனப்படும் வாடிக்கையாளர் சேவை மையங்களும் ஜூன் 14 முதல் 17 வரை அடைக்கப்பட்டு ஜூன் 18 முதல் இயங்கத் துவங்கும் என துபை போக்குவரத்துத் துறை (RTA) அறிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: அதிரை நியூஸ்

No comments