புதுசு

மதினா கடைவீதிகளில் பேரீத்தம் பழங்கள் வரத்து அதிகரிப்பு!புனித மதினா மாநகரில் இஸ்லாமிய வரலாற்றில் நீங்க இடம்பெற்றுள்ள பத்ரு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இவ்வருடம் விளைந்த பலவகையான பேரீத்தம் பழங்களும் ஆரம்பமாக விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளது.

தற்போது தான் பேரீத்தம் கனிகளின் அறுவடை காலம் துவங்கியுள்ளதால் சுமார் 3 கிலோ எடையுள்ள பெட்டிகள் 30 முதல் 55 சவுதி ரியால்கள் வரை விலை போய் கொண்டுள்ளன.

தற்போதைய நிலையில் பெட்டி விலை மேலும் உயரும் என்றும் பேரீத்தம் பழ வரத்து அதிகரிக்கத் துவங்கிய பின் இம்மாத இறுதியில் விலை படிப்படியாக குறையத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முழுஅளவில் பழங்கள் அறுவடை செய்யப்படுவதுடன் விற்பனையும் உச்சத்தில் இருக்கும் என மதினா கடைவீதிகளில் உள்ள பேரீத்தம் பழ வியாபாரிகள் தெரிவித்தனர்.

மதினாவில் தான் பிரசித்தி பெற்றதும் மருத்துவ குணமிக்கதும் ஹதீஸ்களில் சிலாகித்து கூறப்பட்டுள்ளதுமான 'அஜ்வா' வகை பேரீத்தம் பழங்கள் உட்பட பல்வேறு உயர்ரக பேரீத்தம் பழங்கள் விளைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Arab News
தமிழில்: அதிரை நியூஸ்

No comments