புதுசு

சவுதியில் விறுவிறுவென பதிவாகி வரும் ஹஜ்ஜூக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள்!


சவுதியில் உள்நாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கான ஹஜ்ஜூக்கான முன்பதிவுகள் துவங்கிய ஒரே வாரத்தில் பட்ஜெட் கட்டண வகைகளின் கீழ் ஆன்லைன் ஹஜ் விண்ணப்பதாரர்களில் சுமார் 240,000 முன்பதிவு செய்துள்ளனர். அதேவேளை சுமார் 50 லட்சம் பேர் (http://localhaj.haj.gov.sa) இந்த ஹஜ் விண்ணப்ப இணையதளத்திற்குள் வந்து சென்றுள்ளனர். எனினும் இந்த முன்பதிவு இணையதளம் அரபியில் மட்டுமே இருப்பதால் சவுதியில் வாழும் அரபி தெரியாத வெளிநாட்டவர்கள் விண்ணப்பிக்க இயலாமல் தவித்து வருகின்றனர்.

இந்த (http://localhaj.haj.gov.sa) இணையதள பக்கத்தின் மேல் பகுதியில் காணப்படும் உலக உருண்டை படத்தை கிளிக்கினால் வரும் இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் ஆங்கில வடிவில் முழுமையான தகவல்களுடன் இந்த இணையதளம் தெரியவரும் என ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ஹஜ் செல்ல விரும்புவோர்கள் பொதுப்பிரிவு, குறைந்த கட்டணம் மற்றும் முயாஸ்ஸூர் ஆகிய 3 வகையான திட்டங்களின் கீழ் ஆன்லைன் முன்பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுப்பிரிவுக்கான செலவினங்கள் 6,508 முதல் 11,905 சவுதி ரியால்கள் வரையும், குறைந்த கட்டணப் பிரிவிற்கு 3,447 முதல் 4,797 சவுதி ரியால்கள் வரையும், முயாஸ்ஸூர் பிரிவிற்கு 3,465 சவுதி ரியால்களும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

குறைந்த கட்டணப் பிரிவிற்கு 26,458 இடங்களும் முயாஸ்ஸூர் பிரிவிற்கு 10,000 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்த இரு பிரிவின் கீழும் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பெருவாரியாக அலைமோதுகின்றனர். இதுவரை ரியாத் மண்டலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவிலும் இதற்கு அடுத்த இடங்களில் ஜித்தா மற்றும் தம்மாம் மண்டலங்களை சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் பதிவு செய்துள்ளனர். இந்த ஆன்லைன் முன்பதிவுகள் எதிர்வரும் ஜூலை 13 (ஷவ்வால் பிறை 30) உடன் நிறைவடைகின்றன.

சவுதிக்குள் செயல்படும் ஹஜ் சேவை வழங்கும் நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் விளம்பரம் செய்திட தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களும் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே சேவை வழங்க முடியும். அனுமதி வழங்கப்பட்டுள்ள 193 உள்நாட்டு ஹஜ் சேவை நிறுவனங்கள் பற்றிய விபரங்கள் அனைத்தும் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த வருடம் சவுதி மற்றும் சவுதிவாழ் வெளிநாட்டவர்கள் அடங்கிய சுமார் 233,076 பேர் சவுதிக்குள்ளிருந்து ஹஜ் செய்யவுள்ளனர்.

Source: Saudi Gazette
தமிழில்:அதிரை நியூஸ்

No comments