புதுசு

துபையில் பெருநாள் விடுமுறையில் மெட்ரோ, பஸ், டிராம் மற்றும் படகு போக்குவரத்து இயங்கும் நேரங்கள் அறிவிப்பு!


துபையில் ஈகைத் திருநாள் பொது விடுமுறை தினங்களின் போது துபையின் பொது போக்குவரத்துகள் இயங்கும் நேரங்களை துபை போக்குவரத்து துறை (RTA) அறிவித்துள்ளது.

துபை மெட்ரோ – ரெட் லைன்:
ஜூன் 14, வியாழன் அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை (வெள்ளிக்கிழமை ஆரம்ப நேரம்)
ஜூன் 15, வெள்ளி காலை 10 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை (சனிக்கிழமை ஆரம்ப நேரம்)
ஜூன் 16 முதல் 18 வரை, சனி முதல் திங்கள் வரை அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை. (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)

துபை மெட்ரோ – கிரீன் லைன்:
ஜூன் 14, வியாழன் அதிகாலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை (வெள்ளிக்கிழமை ஆரம்ப நேரம்)
ஜூன் 15, வெள்ளி காலை 10 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை (சனிக்கிழமை ஆரம்ப நேரம்)
ஜூன் 16 முதல் 18 வரை, சனி முதல் திங்கள் வரை அதிகாலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை. (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)

துபை டிராம்:
வெள்ளிக்கழமை காலை 9 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)
சனிக்கிழமை முதல் வியாழன் வரை அதிகாலை 6 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)

பஸ் போக்குவரத்து:
கோல்டு சூக் நிலையம் - அதிகாலை 5.14 முதல் நள்ளிரவு 00.59 வரை (12 மணி)
அல் குபைபா (பர்துபை) நிலையம் – அதிகாலை 4.46 முதல் நள்ளிரவு 12.33 வரை
சத்வா நிலையம் – அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 11.59 வரை
C01 பேருந்து  - வழமைபோல் 24 மணிநேரமும் இயங்கும்
அல் கிஸஸ் நிலையம் - அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு வரை
அல் கோஸ் இன்டஸ்ட்ரியல் நிலையம் - அதிகாலை 6 மணிவரை இரவு 11 வரை
ஜெபல் அலி நிலையம் – அதிகாலை 5 மணிமுதல் இரவு 11.30 வரை

மெட்ரோ பீடர் (Metro Feeder) பஸ்கள் - அல் ராஷிதியா, மால் ஆப் தி எமிரேட்ஸ், இப்னு பதூதா, புரூஜ் கலிபா/ துபை மால், அபூ ஹைல் மற்றும் எதிஸலாத் - அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 1.10 மணிவரை (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)

இன்டர் சிட்டி பஸ்கள் பர்துபை நிலையத்திலிருந்து:
ஷார்ஜா – 24 மணிநேரமும் இயங்கும்
அபுதாபி – அதிகாலை 4.40 மணிமுதல் நள்ளிரவு 1.05 மணிவரை (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)
யூனியன் ஸ்கொயர் நிலையம் - அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 00.35 வரை (12.35)
அல் சப்கா நிலையம் – அதிகாலை 6.30 மணிமுதல் நள்ளிரவு 12.30 மணிவரை
தேரா சிட்டி சென்டர் நிலையம் - காலை 6.55 மணிமுதல் இரவு 10.34 வரை
கராமா நிலையம் – காலை 7 மணிமுதல் இரவு 10.10 வரை
அல் அஹ்லி கிளப் நிலையம் - காலை 7 மணிமுதல் இரவு 11 மணிவரை

கிரீக் அப்ரா படகு சேவைகள் - அல் குபைபா, பனியாஸ், துபை ஓல்டு சூக், அல் ஸீஃப் - காலை 10 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை
ஷேக் ஜாயித் ரோடு அப்ரா நிலையம் - மாலை 4 மணிமுதல் இரவு 11.30 வரை
எலக்ட்ரிக் அப்ரா (புரூஜ் கலிபா / துபை மால்) – மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை
அல் மம்ஸர் அப்ரா – மாலை 2 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை
அல் ஸீஃப் / பனியாஸ் - மாலை 4 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை
ஏர் கண்டிஷன்டு அப்ரா (அல் ஜத்தாப், துபை பெஸ்டிவல் சிட்டி) காலை 7 மணிமுதல் 12 மணிவரை.


 

Source: Gulf News
தமிழில்:
அதிரை நியூஸ்

No comments