புதுசு

அஜ்மானில் லைசென்ஸ் புதுப்பிக்கப்படாத வாகனங்களை பிடிக்கும் ஸ்மார்ட் கேமிராக்கள் நிறுவல்!


வாகனங்களின் லைசென்ஸ் புதுப்பிக்கப்படாமல் இயக்கப்படும் வாகனங்களின் பதிவு எண்களை ஸ்கேன் செய்து பிடிக்கும் ஸ்மார்ட் கேமிராக்கள் முதன்முதலில் அபுதாபியில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த நிலையில் தற்போது அஜ்மானிலும் நிறுவப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் வாகனப் பதிவுகள் புதுப்பிக்கப்படாமல் இயக்கப்படும் வாகன நம்பர் பிளேட் எண்களை ஸ்கேன் செய்து பிடிக்கும் நவீன வகை ஸ்மார்ட் கேமிராக்கள் நடைமுறைக்கு வருகின்றன.

இவ்வாறு புதுப்பிக்கப்படாமல் பிடிபடும் வாகன ஓட்டிகளின் மீது 500 திர்ஹம் அபராதத்துடன் 4 கரும்புள்ளிகளும் வழங்கப்படுவதுடன் 7 நாட்களுக்கு வாகனங்களும் முடக்கி வைக்கப்படும் என அஜ்மான் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Source: Khaleej Times / Msn/அதிரை நியூஸ்

No comments