புதுசு

துபை விமான நிலையங்களிலிருந்து ராஸ் கைமாவிற்கு இலவச பஸ் சேவை

 துபை விமான நிலையங்களிலிருந்து ராஸ் கைமாவிற்கு இலவச பஸ் சேவை துவங்கியது

துபை சர்வதேச விமான நிலைய முனையங்களான 1 மற்றும் 3ல் இருந்து ராஸ் கைமாவின் ஹோட்டல்களுக்கு இலவச ஷட்டில் பஸ் சேவை துவங்கியது. இந்த இலவச சேவை ஜூன் 1 முதல் எதிர்வரும் செப்டம்பர் 30 வரை மட்டுமே.

இந்த இலவச சேவையை சுற்றுலா பயணிகளும் ரெஸிடென்ஸ் விசாவுடன் உள்ளவர்களும் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இலவசமாக முன்பதிவு செய்து பயணித்திட இந்த சுட்டிக்குள் செல்லவும்.

You can book a seat online here.

இந்த ஷட்டில் பஸ்ஸில் இலவச வை-வை (wi-fi), இலவச குடிநீர் பாட்டில்கள் மற்றும் வரைபட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த பஸ் பயணத்தின் நேரம் சுமார் 45 நிமிடங்கள். டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 3 ஆகியவற்றிலிருந்து தினமும் தலா 6 பஸ்கள் (தனித்தனியாக) இயக்கப்படுகின்றன.

பஸ்ஸில் பயணிக்க முன்பதிவு செய்த டிஜிட்டல் டிக்கெட் காப்பி (மொபைல் போன், டேப், லேப்-டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள்) அல்லது பேப்பர் டிக்கெட் காப்பியை பிரிண்ட் எடுத்து வர வேண்டும்.

RAK Free ஷட்டில் பஸ் புறப்படும் நேரங்கள்:

Terminal 1
6am
8am
9am
11pm
12am
1am

Terminal 3
6.15am
8.15am
9.15am
11.15pm
12.15am
1.15am

ராஸ் அல் கைமாவில் இறக்கிவிடப்படும் முக்கிய நிறுத்தங்கள்:

The drop-off destinations are major hotels in Ras Al Khaimah, of which these are listed:
- Hilton Ras Al Khaimah Resort & Spa
- Hilton Garden Inn
- Bin Majid Beach Hotel
- The Cove Rotana Resort
- Jannah Resort & Villas - Ras Al Khaimah
- Al Hamra Convention Centre
- Bin Majid Beach Resort
- Rixos Bab Al Bahr
- DoubleTree By Hilton Resort & Spa Marjan Island
- Marjan Island Resort & Spa

Source: Gulf News
தமிழில்:அதிரை நியூஸ்

No comments