புதுசு

மருத்துவ செலவால் ஏழையாகும் இந்தியர்கள்


மருத்துவ செலவு காரணமாக, ஏறக்குறைய 5.5 கோடி இந்தியர்கள் கடந்த ஒரே ஆண்டில் ஏழை ஆகி உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல், புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோய்களுக்காக இந்தியர்கள் செலவிடும் தொகை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், மருத்துவ செலவுகளுக்காக அதிக அளவில் நிதி செலவிடுவதால் ஒரே ஆண்டில் 5.5 கோடி இந்தியர்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 3.8 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர்.

மருந்துக்கு அதிக செலவு:


2011-12ம் ஆண்டு முதல், மக்களின் மருத்துவ செலவின சுமையை குறைப்பதற்காக அரசு காப்பீட்டு திட்டங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. இருப்பினும் மருந்து, மாத்திரைகளுக்காக செலவிடப்படும் தொகை அதிகமாக உள்ளது. அத்தியாவசிய மருந்துகளின் விலையை அரசு குறைத்து வந்தாலும், மருந்துகளின் செலவுகள் மருத்துவமனைகள் சார்ந்ததாக இருப்பதால், இந்தியர்களின் மருத்துவ சுமையை குறைப்பது சவாலாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments