புதுசு

அமீரகத்தில் இந்தியர்கள் On Arrival Visa பெற தகுதிகள் (முழு விவரம்)


 அமீரக விசாவை ஆன் அரைவல் முறையில் பெற இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான தகுதிகள்

அமீரகத்திற்குள் விசா இன்றி நுழைய பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆன் அரைவல் (On Arrival Visa) எனும் முறையில் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் தரைவழி மையங்கள் ஆகியவற்றில் விசாக்கள் வழங்கப்படுகின்றன, இதேபோன்றதொரு அனுமதி இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அமீரக விசாவை ஆன் அரைவல் முறையில் பெற்று நாட்டிற்குள்ளே நுழைந்திட, 

1. இங்கிலாந்து அல்லது ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டின் ரெஸிடென்ட் விசா உடையவராக இருக்க வேண்டும்
2. அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர்கள் அல்லது கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள்
3. மேற்படி நாடுகளிலிருந்து வருபவர்களின் ரெஸிடென்ட் விசாவின் அனுமதி காலம் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது செல்லுபடியாகும் நிலையில் இருக்க வேண்டும்.

ஆன் அரைவல் விசாவை பெற 100 திர்ஹம் அனுமதி கட்டணத்துடன் (Entry permission fee) 20 திர்ஹம் சேவைக் (Service Fee) கட்டணமும் செலுத்தினால் 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் அமீரக விசா வழங்கப்படும். இந்த சேவையை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட நபர் முதலில் மர்ஹபா கவுண்டருக்கு சென்று கட்டணங்களை செலுத்திவிட்டு பின்பு இமிக்கிரேசன் கவுண்டருக்கு வர வேண்டும்.

இந்த 14 நாட்கள் விசா நீட்டிக்க விரும்பினால் கூடுதலாக 250 திர்ஹமும் (Renewal Fee) 20 திர்ஹம் சேவைக்கட்டணமும் (Service Fee) செலுத்தினால் கூடுதலாக 28 நாட்களுக்கு அமீரகத்தில் தங்கலாம். விசா புதுப்பிக்காமல் ஒருவேளை சட்டத்திற்கு புறம்பான வகையில் அமீரகத்திற்குள் தங்கினால் கூடுதலாக தங்கு ஒவ்வொரு நாளுக்கு தலா 100 அபராதம் (Dh100 fine for every additional day) செலுத்த நேரிடுவதுடன் கூடுதலாக 200 திர்ஹம் வெளியேறும் பெர்மிட்டுக்கான (Departure Permit Fee) கட்டணமும் செலுத்த வேண்டும்.

Source: Gulf News
தமிழில்:அதிரை நியூஸ்

No comments